அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும்.
அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
Published on

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை மறுநாள் (22.9.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 33 KV கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் 11 கி.வோ. உயரழுத்த மின்மாற்றி III அமைக்கும் பொருட்டு, 11 கி.வோ. பஸ்பார் விஸ்தரிப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமத்தமன்நகர், இடர்ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதிஅம்மன்கோயில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகைநகர், அழகம்மாள்நகர், கிருஷ்ணாநகர், புவனேஷ்வரிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com