கோவில் ஆபரணங்களை பாதுகாக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு தொகுப்பூதியம் உயர்வு: அமைச்சர் சேகர்பாபு

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவில் ஆபரணங்களை பாதுகாக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு தொகுப்பூதியம் உயர்வு: அமைச்சர் சேகர்பாபு
Published on

இந்து சமய அறநிலையத்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்து பிரிவுகளிலும் தகுதியான தேவையான பயிற்சி பெற்றவரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய 2 இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு அர்ச்சகராக பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதியன்று முதல்-அமைச்சர் 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்களில் 22 அர்ச்சகர்கள் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்தவர்களாகும். திருக்கோவில்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் ஆபரணங்களை பாதுகாக்கும் வகையில் திருக்கோவில் பாதுகாப்பு படை எனும் தனிப்பிரிவில் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 மாத தொகுப்பூதியம் தற்போது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com