கோஷ்டி மோதல்; 10 பேர் மீது வழக்கு

வடமதுரை அருகே பாதை பிரச்சினையால் 2 கோஷ்டியாக மோதிக் கொண்டனர்.
கோஷ்டி மோதல்; 10 பேர் மீது வழக்கு
Published on

வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி லக்கன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது உறவினரான ராஜாராம் என்பவருக்கும் இடையே பாதையை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் இருகோஷ்டியாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கணேசன் மற்றும் ராஜாராமின் மனைவி தமிழரசி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து இருகோஷ்டியினரும் வடமதுரை போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் இருகோஷ்டியை சேர்ந்த ராஜாராம், சதீஷ், குமார், கணேசன், சித்ரா, ராஜா உள்பட 10 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com