

சென்னை,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதையடுத்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிராத்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.