விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்ட ம்

கடையத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்ட ம்
Published on

கடையம்:

கடையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோவில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில் நில உரிமை கோரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையம் சின்னத்தேர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டநாதன் தலைமை தாங்கினார். ஜீவா, அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதம், பரமசிவன், ஈஸ்வரன், கிட்டப்பா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வழிபாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்களின் குத்தகை சாகுபடியாளர் மற்றும் குடியிருப்போருக்கு நில உரிமை வழங்கக் கோரியும், இயற்கை பேரிடர் பாதுகாப்பு ஆண்டுகளின் குத்தகை பாக்கி மற்றும் வாடகை முறையில் மனைகளுக்கு விதிக்கப்பட்ட நிலுவை தொகையை ரத்து செய்யக் கோரியும், நீண்ட காலம் பயிர் செய்து வரும் குத்தகை விவசாயிகளுக்கு நில உரிமைப் பட்டா வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com