அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதற்கு முதல் அமைச்சர் வரவேற்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதற்கு முதல் அமைச்சர் வரவேற்பு
Published on

சென்னை,

உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பெற்ற 1197 சதுர கி.மீ பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில் 5-வது காப்பகமாக அகஸ்தியர் மலையை அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com