

சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில், மத்தியஅரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனு ஏமாற்றம்அளிக்கிறது. அதில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதுகுறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காத மத்திய அரசு, இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டை அணுகும்படி அறிவுறுத்தியிருப்பது காலம்தாழ்த்தும் உத்தியேதவிர வேறில்லை.
மத்தியஅரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான் ஐக்கியமுற்போக்கு கூட்டணி கூட்டத்தில் போராடி பெற்றுத்தந்தார்.
அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இப்போதுள்ள கட்டமைப்பின்படியே 27 சதவீத இடஒதுக்கீடு பெறும்உரிமை பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளது. அந்தஉரிமையை வென்றெடுப்பதற்காகத்தான் பா.ம.க. கடந்த பலஆண்டுகளாக போராடிவருகிறது. அந்தவகையில் நீதிமன்றங்களில் சட்டரீதியாகவும், மத்தியஅரசிடம் அரசியல்ரீதியாகவும் போராட்டங்களை மருத்துவமாணவர்சேர்க்கை இடங்களுக்கான அகிலஇந்திய ஒதுக்கீட்டில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத்தராமல் பா.ம.க. ஓயாது. ஏனென்றால் பா.ம.க. ஒரு சமூகநீதிக்கட்சி.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.