

புதுச்சேரி,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.