

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் 13 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் 53 அரசு பள்ளிகள் மற்றும் 43 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 13,053 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரிசரவணன், யூனியன் துணை சேர்மன் செல்வி, நகராட்சி கவுன்சிலர் உமாசங்கர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்றார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன்திருமலைகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்பாது அவர் பேசிசயதாவது:-
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழக முதல்-அமைச்சர் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மாணவ-மாணவிகள் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு நல்லதொரு இடத்தை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சந்திரன், குருவசந்த், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், ராஜராஜன், அப்துல் காதர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணைச் செயலாளர் கேபிள் கணேசன், வார்டு செயலாளர் வாழைக்காய் துரை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.