விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் - நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை (11-ந் தேதி) நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் - நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Published on

கோவை,

கோவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர் கார் மூலமாக ஈரோடு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

11-ந்தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்க பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுத்தார்.

இதில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் முழு பணிகளும் நிறைவு பெறும். கோவை மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அ.தி.மு.கவினர் பதில் கூற வேண்டும். ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com