கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்துவெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பப்பாளிகள் அனுப்பப்படுகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்துவெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்
Published on

உப்புக்கோட்டை, பாலார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான இங்கு முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பப்பாளி சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பப்பாளி கன்றுகள் நடவு செய்த நாளில் இருந்து 7 மாதங்களுக்குள் விளைச்சல் அடைந்து விடுகிறது. 2 வாரத்திற்கு ஒருமுறை காய்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் பப்பாளி மரங்கள் மூலம் மகசூல் கிடைக்கும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைச்சல் அடையும் பப்பாளிகள் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகிறது. அவற்றில் இருந்து மருந்து தயாரிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் அதிக அளவில் பப்பாளிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com