அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, இதுவரை 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.
அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு
Published on

சென்னை,

கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் பதிவேற்றம் நாளை தொடங்க இருந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, இதுவரை 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் எனவும் http://tngasa.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்று கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com