புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மற்ற கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் - ரா.முத்தரசன் அறிக்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மற்ற கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் - ரா.முத்தரசன் அறிக்கை
Published on

சென்னை,

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இருமொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ரா.முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பதில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கையை அனுமதிக்காது என தமிழ்நாடு அரசின் முதல்வர் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

மத்திய அரசு அமலாக்கத் துடிக்கும் புதிய கல்விக் கொள்கையின் தீய விளைவுகளை எதிர்த்து குரல் கொடுத்த தமிழக மக்களின் உணர்களுக்கு மதிப்பளித்தும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும் தமிழ்நாடு அரசு இருமொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என அறிவித்திருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறியுள்ள மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என முதல்வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com