இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

செம்பட்டி அருகே உள்ள சாலைபுதூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). கூலித்தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து சாலைபுதூருக்கு அரசு பஸ்சில் சென்றார். சாலைபுதூரில் அவர் பஸ்சில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இழப்பீடு கேட்டு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் காயமடைந்த பெருமாளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 186 வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பெருமாளுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

இதையடுத்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட்டு, அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரைக்கு செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com