மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்
Published on

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

மண்டைக்காடு கோவில்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் நாள் விழாவான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.

தீவட்டி ஊர்வலம்

மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு பாலப்பள்ளம் நடுப்பிடாகை முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்தது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், சொற்பொழிவு போட்டி, சங்க வருடாந்திர மகாசபை கூட்டம், 5 மணிமுதல் இரவு 7 மணிவரை கலைநிகழ்ச்சி, 7 மணிமுதல் 9 மணிவரை நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் தலைமையில் மாதர் மாநாடு, இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு சொற்பொழிவு, 10.30 மணிக்கு மேல் புராண நாட்டிய நாடகம் நடந்தது.

விழாவின் 9-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com