தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம்
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அனைத்து தாலுகாக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட அளவில் குறைதீர் அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைதீர் அலுவலராக ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களின் வேலை அடையாள அட்டை, சம்பளம் உள்ளிட்டவை தொடர்பான புகார் மற்றும் இதர குறைபாடுகள் இருந்தால் அவற்றை ombudsperson.kallai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள குறைதீர் அலுவலரிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com