

சென்னை,
தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இந்த ஆய்வை பிற ஆய்வாளர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், நியோகோவ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நியோகோவ் வகை கொரோனா வௌவாலில் இருந்து வௌவாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துக்களைப் பகிர வேண்டாம்.
தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதுகாப்பு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.
கொரோனா மூன்றாவது அலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்'' என்று தெரிவித்தார்.