கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை:குரும்பூர் பள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்

கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு பொக்லைன் எந்திரம் மூலம் கடந்து சென்றனர்.
கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை:குரும்பூர் பள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்
Published on

டி.என்.பாளையம்

கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு பொக்லைன் எந்திரம் மூலம் கடந்து சென்றனர்.

மழை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன்காரணமாக மாக்கம்பாளையம் கிராமத்துக்கு செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

பொக்லைன் எந்திரம் மூலம்...

ஒரு சிலர் ஆபத்தை உணராமல் தட்டு தடுமாறி காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர். ஆனால் பலர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தில் ஏறி அதன் மூலம் காட்டாற்று வெள்ளத்தை கடந்தனர்.

மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தையும் பொக்லைன் எந்திரத்தில் ஏற்றி அதன் மூலம் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர். இதேபோல் கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் வழியில் ரோட்டில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளம் படிப்படியாக வடிந்த பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com