

ஊட்டி,
குளிர்பிரதேசமான ஊட்டியில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் உறைபனி தாக்கம் தொடங்கியது. ஊட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியான அவலாஞ்சியில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளது.
அவலாஞ்சி பனிச்சரிவு, பனிப்பாறை மற்றும் அதிக மழை பெய்யும் 2-வது சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. இன்று அதிகாலை அவலாஞ்சி அணையை ஒட்டி பசுமையான புல்வெளிகள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. காலையில் வெயில் வந்த பின்னர் பனி கரைந்து ஓடியது. மின் உற்பத்தி நிலையம் பகுதியில் வெப்பமானி பொருத்தப்பட்டு உள்ளது.
அதில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. நீலகிரியில் அதிக மழைப்பொழிவு பகுதியாகவும், அதிக உறைபனி தாக்கம் உள்ள இடமாகவும் அவலாஞ்சி விளங்குகிறது.