அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.
அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
Published on

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, வெள்ளித்திருப்பூர் பகுதி விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.120-க்கும் ஏலம் போனது. பீடா வெற்றிலை ஒரு கட்டு குறைந்தபட்ச விலையாக ரூ.30-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.50-க்கும் ஏலம் போனது. செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு ரூ.17-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com