கன்னியாகுமரியில்சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறைநாளையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரியில்சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Published on

கன்னியாகுமரி:

விடுமுறைநாளையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அதன்படி விடுமுறைநாளான நேற்று அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இருந்து அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

படகில் பயணம்

பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறைக்கு சென்றனர். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்தனர்.

அங்கிருந்து கரை திரும்பிய சுற்றுலா பயணிகள் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையாட்டி போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com