லட்சுமிபுரத்தில்ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு

பெரியகுளம் அருக லட்சுமிபுரத்தில் உள்ள ஊருணியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக்கேட்டால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
லட்சுமிபுரத்தில்ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு
Published on

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில், அரசு துணை சுகாதார நிலையம் செல்லும் வழியில் ஊருணி உள்ளது. நிலத்தடி நீர் மேம்படவும், மழைநீர் தேங்கி நின்று மக்கள் பயன்படுத்தும் வகையிலும் இந்த ஊருணி அமைக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த ஊருணி சுகாதாரக்கேட்டில் சிக்கி உள்ளது. ஊரில் உள்ள கழிவுநீர் இங்கு கலந்து வருகிறது. இதனால் தற்போது ஊருணி கழிவுநீரால் நிரம்பி உள்ளது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. ஊருணி முழுவதும் பாசி படர்ந்தும், நீர்வாழ் தாவரங்கள் படர்ந்தும் காட்சி அளிக்கிறது. அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசும் அவல நிலையில் உள்ளது.

இந்த ஊருணியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தூர்வார வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் தொல்லையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதாரக்கேடு காரணமாக மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த ஊருணியை சுத்தம் செய்து, கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com