சத்தியில்பள்ளிக்கூட வாகனங்கள் சோதனை

சத்தியில் பள்ளிக்கூட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
சத்தியில்பள்ளிக்கூட வாகனங்கள் சோதனை
Published on

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் பள்ளி வளாகத்தில் நேற்று சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் செயல்படும் 29 தனியார் பள்ளிக்கூடங்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. சத்தி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 156 வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைப்பதற்கு கருவிகள் உள்ளதா?, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?, அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளதா? என்று கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் பி.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com