

சென்னை,
சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் 10 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 5 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மணலி மண்டலத்தில்- 10 சதவீதம், சோழிங்கநல்லூர்- 9.3 சதவீதம், திருவொற்றியூர்- 4.3 சதவீதம், தண்டையார்பேட்டை- 3.9 சதவீதம், வளசரவாக்கம்- 3.5 சதவீதம், அம்பத்தூர் - 3.2 சதவீதம், மாதவரம்- 2.9 சதவீதம், ராயபுரம்- 2.4 சதவீதம், ஆலந்தூர்- 1.8 சதவீதம், பெருங்குடி- 1.7 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அடையாறு மண்டலத்தில் - 2.7 சதவீதம், அண்ணாநகர் - 4.4 சதவீதம், திரு.வி.க நகர் - 6.1 சதவீதம், தேனாம்பேட்டை - 6.3 சதவீதம், கோடம்பாக்கம்- 9.4 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது.
மேற்கண்ட தகவல் மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.