விண்வெளி துறையில் இந்தியா மேற்கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன-மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி துறையில் இந்தியா மேற்கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விண்வெளி துறையில் இந்தியா மேற்கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன-மயில்சாமி அண்ணாதுரை
Published on

சென்னை

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷரம் பள்ளியில், பாதுகாப்பை நோக்கி என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை, மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட அவர், அவற்றின் விளக்கங்களையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

சந்திரயான்-1 மூலமாக, நிலவின் தென் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சந்திரயான்-2 ஆராய்ச்சியை மேற்கொள்ளும். விண்வெளி துறையில் இந்தியா மேற்கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன என கூறினார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாதிரி அத்திவரதர் சிலையை மாணவர்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com