தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பொங்கலுக்குப் பிறகு தொடங்க உள்ளதாக தகவல்!

2023-ம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் பொங்கலுக்கு பிறகு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பொங்கலுக்குப் பிறகு தொடங்க உள்ளதாக தகவல்!
Published on

சென்னை,

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.

இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய சட்டசபைகூட்டம் நிறைவடையும்.

கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புதிய அமைச்சராக பொறுப்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் பெயர் அமைச்சர்கள் வரிசையில் 10 வது இடத்தில் இருப்பதால் சட்டப்பேரவையில் முதல் வரிசையிலே இடம் ஒதுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com