குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆலோசனை

கூடல்நகர் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள இடத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆலோசனை
Published on

தூத்துக்குடி,

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. இதற்காக 2,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட நில அளவீடு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக கூடல்நகர், மாதவன்குறிச்சி, அமராபுரம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நெல்லை மகேந்திரகிரியில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், குலசேகரப்பட்டினத்திற்கு வருகை தந்து அங்குள்ள கூடல்நகர் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com