

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சுத்தப்படுத்தும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசு துறைகள் அனைத்தும் கெட்டு போய்விட்டது என்று கூறி உள்ளார். தொடர்ந்து அவதூறு தெரிவித்தால், அரசு சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்படும். தமிழக அரசு திரைப்பட நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்காக விருது வழங்கி கவுரவித்து உள்ளது. திரைப்படத்துறையினர் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் பாராட்டக்கூட மனம் இல்லாதவர். அவரைப்பற்றி கூற விரும்பவில்லை. இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா எங்களுக்கு மீட்டுத்தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.