கன்னியாகுமரி: வைகாசி தேர் திருவிழாவில் தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் - எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்

கன்னியாகுமரி குமாரகோவில் முருகன் கோவிலில் அமைச்சர் தேரை வடம் பிடித்து இழுத்தார்.
கன்னியாகுமரி: வைகாசி தேர் திருவிழாவில் தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் - எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்
Published on

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள குமாரகோவில் முருகன் கோவிலில் வைகாசி தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது ,அமைச்சர் மனோ தங்கராஜ் இறை நம்பிக்கை இல்லாதவர் என்றும்,அதனால் அவர் குமாரகோவில் தேரை வடம் தொட்டு இழுக்க கூடாது எனவும் பா.ஜ.க. வினர் போராட்டம் நடத்தினர்.இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com