விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26-ம் தேதி முதல் ஆக.2-ம் தேதி வரை முழு முடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26-ம் தேதி முதல் ஆக.2-ம் தேதி வரை முழு முடக்கம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26ஆம் தேதி முதல் ஆக.2ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கத்தை துணை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 28 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கம் அமலில் இருந்தாலும் பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com