கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி மனு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி மனு
Published on

சென்னை.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். 

இதனிடையே கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருக்கும் மனு செப்டம்பர் 19-ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com