

மதுரை,
தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, அங்கு மலையேற்றம் சென்ற 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 90 சதவீத காயங்களுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சியைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் என்பவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.
இதற்கிடையே, சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை நோக்கம் இல்லாத மரணத்துக்கு காரணமாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிரெக்கிங் கிளப்பிற்கு குரங்கணி மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்த ஏஜெண்ட் பிரபு ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.