மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ரெம்டெசிவிர் மருந்தை நாளொன்றுக்கு 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போதுமான கையிருப்பு இல்லாததால் மாநில முழுவதும் அரசு மருத்துவமனையில் முன்பு ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்தை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சில இடங்கில் இரவு முழுவதும் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் அளவை அதிகரிக்கக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுத்தினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 20 ஆயிரம் என்ற அளவில் உயர்த்தியது.

இந்நிலையில், தமிழகத்திற்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை நாளொன்றுக்கு 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின், எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தை, நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

கொடிய கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து போராடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com