பரமத்தியில் கிராவல் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு

பரமத்தியில் கிராவல் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு
பரமத்தியில் கிராவல் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி, உதவியாளர் சுதாகர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போ லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த சமயம் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரான திருப்பூர் மாவட்டம் சோமனூர் ரோடு வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com