லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட கட்டுமான பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் ஆய்வு

லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்
லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட கட்டுமான பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் ஆய்வு
Published on

முல்லைப்பெரியாற்றின் தலை மதகு பகுதியான லோயர்கேம்ப் வண்ணான் துறையில் ரூ.1296 கோடி செலவில். புதிய தடுப்பணை கட்டி அங்கிருந்து ராட்சத குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந் நிலையில் வண்ணான்துறை பகுதியில் நடைபெறும் கட்டுமான பணியை  சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கூடலூர் பகுதியை சேர்ந்த பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் மற்றும் விவசாயிகள் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கூடலூர் அருகே வண்ணான் துறை பகுதியில் புதிய தடுப்பணை கட்டி நேரடியாக ராட்சத குழாய் மூலம் மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக வைகை அணையில் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆய்வின்போது மதுரை மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மதுரை மாநகராட்சி பொறியாளர் பாக்யலட்சுமி, மதுரை குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் அரசன், உத்தமபாளையம் பெரியார் -வைகை நீர்ப்பாசன பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com