வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது

வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது
Published on

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 27). இவருக்கும் இவரது மனைவி ஆனந்தி (25) என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று, ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்தின்போது 16 பவுன் நகை வரதட்சணையாக கேட்டபோது, 11 பவுன் மட்டும் போட்டதாகவும், ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீதமுள்ள 5 பவுன் நகையை வாங்கி வரக்கோரி கடந்த 12-ந் தேதி ஆனந்தியை ரவி திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஆனந்தி ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com