மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேர்முகத்தேர்வு

108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேர்முகத்தேர்வு விழுப்புரத்தில் நாளை மறுநாள் நடக்கிறது
மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேர்முகத்தேர்வு
Published on

விழுப்புரம்

108 அவசரகால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி (பிளஸ்-2 வகுப்பின் 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி.விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம். மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.15,435 ஊதியம் வழங்கப்படும். டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.15,235 ஊதியம் வழங்கப்படும். அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். உடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். இந்த தகவல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com