கிருஷ்ணகிரியில், 5 ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரியில், 5 ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்
Published on

கிருஷ்ணகிரியில் 5 ஒன்றியங்களை சேர்ந்த 173 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 173 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் 5 ஒன்றியத்தில் இருந்து 173 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இணைவழி வரி வசூல், பொது கழிப்பிடங்களை சுத்தமாகவும், தங்களது ஊராட்சியில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தியும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும்.

முனைப்போடு செயல்பட வேண்டும்

மேலும் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் முறையாக வினியோகம் செய்யவும், தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்ற தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எவ்வித பாகுபாடு இல்லாமல் சமமாக கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குருராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com