மேலச்செங்குடி கோவில் வருடாபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கோவில் வருடாபிஷேக விழா நடந்தது.
மேலச்செங்குடி கோவில் வருடாபிஷேக விழா
Published on

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மேலச்செங்குடி பத்திரகாளியம்மன், கருப்பணசுவாமி கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி பூஜை, விக்னேஸ்வரர் வழிபாடு தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர்களுக்கு ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.அபிஷேகம் செய்யப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனித நீர் மூலவர்களுக்கு ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com