எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு

தேவகோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு
Published on

தேவகோட்டை,

தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே எம்.ஜி.ஆரின் நினைவு நாள் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அசோகன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் மருதுஅழகுராஜ் ஆகியோர் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக திருச்சி- ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள உள்ள எம்.ஜி.ஆர்.முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஏராளமானோர் ஊர்வலமாக திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா அருகே வந்தனர். அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் தேவகோட்டை நகர் கழக செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி நகர் கழக செயலாளர் பாலா, அரசு முன்னாள் வக்கீல் ராமநாதன், காரைக்குடி தொகுதி கழக செயலாளர் பழனி, தேவகோட்டை நகர பொறுப்பாளர்கள் அவை தலைவர் முடியரசன், சிவக்குமார், வேலாயுதம் கருணாநிதி, ராமநாதன் சண்முகவேலு, ஜோ மைக்கேல், அருண் பாண்டி, காளைராஜன், இளைய பாரதி, பிரதாப், பிரவீன், சந்திரசேகர், தேவகோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாவாசி கருப்பையா, தேவகோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தியாகராஜன், தேவகோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன், தேவகோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வினோத், கண்ணங்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், கண்ணங்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அ.தி.மு.க. சிவகங்கை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மற்றும் நகர பொருளாளர் லெட்சுமணன் நன்றி கூறினார

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com