ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்: ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். #RajiniKanth
ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்: ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று(சனிக்கிழமை) அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி வழியாக இமயமலைக்கு ரஜினிகாந்த் செல்கிறார். ஏறக்குறைய 15 நாட்கள் கழித்து ரஜினிகாந்த் தமிழகம் திரும்புவார் என்று தெரிகிறது. ரஜினிகாந்தின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக இன்று காலை விமான நிலையம் வந்தபேது செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஜெயக்குமார் கூறியதாவது:- ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் அமைதி தவழும் மாநிலமாக திகழ்கிறது என்றார். அப்போது, ரஜினியின் இமயமலைப்பயணம் பற்றி கேட்ட போது, ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com