கன்னியாகுமரியில் மழை பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு

கன்னியாகுமரியில் மழை பாதித்த இடங்களில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரியில் மழை பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு
Published on

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

முதலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செண்பகராமன்புதூர், செம்பாறை பகுதிகளில் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன்பின்னர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாய பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த்,விஜய் வசந்த் எம்.பி., மின்வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மழை பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மின் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com