

கோவை,
கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, பெரியார் சிலை பற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்துள்ளன. இந்த சூழலில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.