

பாளையங்கோட்டை வ.உசி. மைதானத்தில் கடந்த 3-ந் தேதி விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் பலர் வந்தனர். அப்போது சமாதானபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் மர்மநபர் ஒருவர் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.