தாயின் இறுதி சடங்கில் சீர் செய்யாத தாய்மாமன்... விஷம் கொடுத்து கொன்ற மருமகன் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில், தாயின் இறுதிச் சடங்கின் போது சீர்வரிசை செய்யாத தாய்மாமனுக்கு, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மருகனை போலீசார் கைது செய்தனர்.
தாயின் இறுதி சடங்கில் சீர் செய்யாத தாய்மாமன்... விஷம் கொடுத்து கொன்ற மருமகன் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
Published on

மதுரை,

மதுரையில், தாயின் இறுதிச் சடங்கின் போது சீர்வரிசை செய்யாத தாய்மாமனுக்கு, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மருகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில், மதுவில் தின்னர் கலந்து குடித்து உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிடாரிப்பட்டியை சேர்ந்த பனையன், கருத்தமொண்டி ஆகிய இருவருக்கும் வீரணன் என்பவர் மதுவில் தின்னர் கலந்து கொடுத்ததில் பனையன் உயிரிழந்தார். கருத்தமொண்டி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட வீரணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீரணன் தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தனது தாய் மாமனான பனையனை அழைத்து இருக்கிறார். மேலும் தாய் இறப்பின் போது செய்ய வேண்டிய சீர்களையும் செய்யுமாறு கூறி இருக்கிறார். ஆனால் பனையன் இறுதிச் சடங்கிற்கு வராமல் தவிர்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரணன் மதுவில் விஷத்தை கலந்த கொடுத்து பனையனை கொலை செய்ததாக பேலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com