

சென்னை,
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.
இந்த அறிக்கையின்படி தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் மாற்றப்படுவார் என ஒரு பிரிவு ஊடக தகவலில் கூறப்பட்டு உள்ளது. இந்த தகவலை முரளிதர ராவ் மறுத்துள்ளார். இந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு மாறானது. இது விஷமம் நிறைந்தது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் நீடித்திடுவார் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்து உள்ளார்.