

சென்னை,
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யபட்டார்.சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் இருந்து நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனைக்கு திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலை ஆஜர்படுத்தியது காவல்துறை
மாஜிஸ்திரேட் கோபிநாத் முன் விசாரணை நடந்தது.நக்கீரன் கோபால் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவை வாசித்தார்.
124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது. 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை. என மாஜிஸ்திரேட் கோபிநாத் கூறினார்.
நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தது.
விடுதலையான நக்கீரன் கோபால் நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்று உள்ளது. எனக்கு ஆதரவு அளித்த அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி என கூறினார்.