நக்கீரன் பத்திரிக்கையை முடக்க நினைக்கின்றனர்- நக்கீரன் கோபால்

நக்கீரன் பத்திரிக்கையை முடக்க நினைக்கின்றனர் என நக்கீரன் கோபால் கூறி உள்ளார். #NakheeranGopal
நக்கீரன் பத்திரிக்கையை முடக்க நினைக்கின்றனர்- நக்கீரன் கோபால்
Published on

சென்னை

தமது விடுதலைக்கு போராடிய வைகோவை நேரில் சந்தித்த பின் நக்கீரன் கோபால் நன்றி கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கோபால் சந்தித்தார், தாம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக ஸ்டாலினுக்கு கோபால் நன்றி தெரிவித்தார்.

சென்னையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நக்கீரன் பத்திரிகையை முடக்க நினைக்கின்றனர்; சிறையில் இருக்கும் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து என செய்தி வெளியிட்டதால்தான் கைது நடவடிக்கை, கைதுக்கு டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com