நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்

நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை ஆளுனர் மாளிகை பொறுத்து கொள்ளாது என நக்கீரன் இதழ் கட்டுரை குறித்து ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.
நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்
Published on

சென்னை

நக்கீரன் இதழ் கட்டுரை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. அதில் நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை ஆளுனர் மாளிகை பொறுத்து கொள்ளாது. நக்கீரன் இதழில் வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.

மதுரை காமராஜர் விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கவில்லை. தவறான தகவல்களை மாநிலத்தின் முதல் குடிமகன் மீது தெரிவித்து இருக்கிறார்கள்.

உண்மையை தெரிந்து கொள்ளாமல் நக்கீரன் இதழில் வந்த செய்திகளை சிலர் ஆதரிக்கிறார்கள். ஆளுனரையோ அவரது செயலாளரையோ நிர்மலாதேவி சந்திக்கவில்லை. கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுனர் மாளிகை வந்தது இல்லை . ஆளுனரின் மதுரை பயணத்தின் போது அவரது செயலாளர் உடன் வரவில்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com