தேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 Nov 2024 10:44 AM IST (Updated: 16 Nov 2024 10:45 AM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையாளர்களின் தைரியம், ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தேசிய பத்திரிகையாளர் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகையாளர்களின் தைரியம், ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது.

பயம் அல்லது ஒரு சார்பால் கட்டுக்கடங்காமல் பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story